கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சென்னை தொழிலதிபர்…. அடுத்த அதிர்ச்சி !

  0
  3
  Rep Image

  பிரபல காஃபி டே உரிமையாளரும், தொழிலதிபருபான சித்தார்த்தா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

  சென்னை கீழ்ப்பாக்கம் தம்புசாமி தெருவில் உள்ள பிரின்ஸ் கார்டன் என்ற குடியிருப்பில் 3-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தேவேந்திர மேத்தா. இவர் மிகப்பெரிய தொழிலதிபராவார். மேத்தா, அவரது 3 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதில் மேத்தாவுக்கு தலையில் பலமாக அடிப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மேத்தாவின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரிடம் மேத்தாவின் வீட்டிலிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. 

  தற்கொலை
  அந்த கடிததில், “தன் சாவுக்கு யாரும் காரணமில்லை.. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதே என்னுடைய இத்தகைய முடிவுக்கு காரணம்” என்று எழுதியிருந்தார்.  இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.