கடவுள்  எங்கே  இருக்கிறார்

  0
  36
  கடவுள்

  அது ஒரு ஆன்மிக தலம். மலையின் உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள். ரொம்ப விசேஷமான கோயில் அது. அந்த மலை உச்சிக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்தால், நம் வாழ்க்கையில் எல்லா சுகங்களும் கிடைக்கும் என்றார்கள்.
  கடவுளைப் பார்க்க ஒரு நாள் நானும் ஆர்வமுடன் மலை உச்சிக்குச் செல்ல பயணத்தை ஆரம்பித்தேன். கடவுளைப் பார்க்க வெறுங்கையோடு செல்லாதே… ஏதாவது கொண்டு போ’ என்றார்கள்.

  அது ஒரு ஆன்மிக தலம் . மலையின் உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள். ரொம்ப விசேஷமான கோயில் அது. அந்த மலை உச்சிக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்தால், நம் வாழ்க்கையில் எல்லா சுகங்களும் கிடைக்கும் என்றார்கள்.
  கடவுளைப் பார்க்க ஒரு நாள் நானும் ஆர்வமுடன் மலை உச்சிக்குச் செல்ல பயணத்தை ஆரம்பித்தேன். கடவுளைப் பார்க்க வெறுங்கையோடு செல்லாதே… ஏதாவது கொண்டு போ’ என்றார்கள்.

  temple

  குசேலனின் அவல் போல் இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்.  அருகே செல்ல செல்ல, மலையடிவாரத்திலேயே சிறிது நேரம் மலைத்து நின்றுக் கொண்டிருந்தேன். ரொம்ப உயரம் போலவே… என்னால் ஏற முடியுமா என்கிற கலக்கம் தான் முதலில் தோன்றியது. மலையைச் சுற்றிலும் நிறைய வழிகள் இருந்தது. மேலே  மலையின் உச்சிக்குச் செல்ல நிறைய வழிகளும் இருந்தது. அமைதியான பாதை ஒன்று…ஆழ்ந்த தியானம், மந்திர வழி, தந்திர வழி, ஸ்பெஷல் கட்டண வழி, கடினமான வழி, குறுக்கு வழி, சிபாரிசு வழி, ஸ்பெஷல் தரிசனம் என்று கடவுளைக் காண்பதற்கு நிறைய வழிகள் இருந்தது.
  எல்லா வழிகளிலுமே போர்டுகள் மாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள் சிலர். சில வழிகாட்டிகள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சிலரோ, ‘என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை…’ என்று ஒதுக்கி விட்டார்கள். ‘நான் கூட்டிச் செல்கிறேன்… கட்டணம் தேவையில்லை. ஆனால், என் வழியி்ல் மட்டும் தான் வர வேண்டும்’ என்று  பிரசங்கங்களும் சில இடங்களில் இருந்தது. மேலும் சிலர் என் கையைப் பிடித்து இழுத்துச் செல்லவும் துவங்கினார்கள். ‘உனக்குப் பதில் நான் மேலே ஏறிச் செல்கிறேன். நீ பணம் மட்டும் செலுத்து. புண்ணியம் உனக்கு’ என்றான் இன்னொரு அதிமேதாவி.

  god

  ‘கடவுளைப் பார்க்கணும்..  அவ்வளவு தானே? இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்.. அது போதும்!’ என்றான் இன்னொருவன்.  ‘அதெல்லாம் உன்னால் மேலே ஏற முடியாது. எங்களால் மட்டும் தான் ஏறமுடியும்…’ என்று ஆணவத்துடன் சில பேர், அதிகாரத்துடன் சிலர் என்று கடவுள் மீது இன்னும் வன்மத்தைக் கூட்டினார்கள். 
  ‘உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை.. ஏறினால் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும். அது ஒரு வழிப்பாதை. ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது. அப்படியே போக வேண்டியதுதான்’ என்று பயமுறுத்த ஆரம்பித்தார்கள் இன்னும் சிலர்.
  ‘சாமியாவது பூதமாவது அது வெறும் கல். அங்கே ஒன்றும் இல்லை. வெட்டி வேலை. போய் பிழைப்பைப் பார்’ என்று மலையேறுவதற்கான பாதையை அடைத்து வைத்துப் பகுத்தறிவு பேசினர் சிலர்.
  குழம்பி நின்ற என்னிடம் கை நீட்டியது ஒரு பசித்த வயிறு. கடவுளுக்கென்று கொண்டு வந்ததை அந்தக் கையில் வைத்தேன்.
  ‘மவராசியா இரு…’ என்று வாழ்த்திய முகத்தைப் பார்த்தேன்.
  நன்றியுடன் எனை நோக்கிய அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து என்னைப் பார்த்து புன்னகைத்தார் கடவுள்!
  ‘இங்கென்ன செய்கிறீர்கள். உங்களைப் பார்க்கத் தானே அவ்வளவு பேரும் மேலே ஏறிக் கொண்டிருக்கிறார்கள்?’
  “நான் இங்கேதானே இருக்கிறேன்”
  ‘அப்போ அங்கிருப்பது யார்..?’ மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்.
  “ம்ம்ம்…அங்கேயும் இருக்கிறேன்…எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
  இங்கே எனைக் காண முடியாதவர்கள் அங்கே பார்ப்பதற்காக சிரமப்பட்டு வருகிறார்கள்” என்றார் கடவுள்.  

  god

  ‘என் தரிசனத்தைப் பெற கண்கள் தேவையில்லை. மனது தான் வேண்டும்.  சிரமப்பட்டு மலையேறி வந்தால் தான் நான் பலன் தருவேன் என்பதில்லை. இருக்கும் இடத்தில் இருந்தப்படியே என்னை தரிசிக்கலாம்… அதற்கான மனசு தான் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை’ என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கடவுள்.
  கடவுளைக் கண்ட மகிழ்ச்சியில் வீடு திரும்பினேன்.