கடவுளைக் கண்டுப்பிடிப்பது எப்படி?

  0
  9
  God

  தூணிலும் இருப்பார், துருப்பிலும் இருப்பார் என்று சொல்கிறோம்.  ஆமாம், இந்த பிரபஞ்சம் முழுவதும் கடவுள் நிரம்பியிருக்கிறார் என்று தான் நாம் நம்புகிறோம். ஆனால், எத்தனை பேர் அந்த நம்பிக்கையில் உறுதியாய் இருக்கிறீர்கள்?

  தூணிலும் இருப்பார், துருப்பிலும் இருப்பார் என்று சொல்கிறோம்.  ஆமாம், இந்த பிரபஞ்சம் முழுவதும் கடவுள் நிரம்பியிருக்கிறார் என்று தான் நாம் நம்புகிறோம். ஆனால், எத்தனை பேர் அந்த நம்பிக்கையில் உறுதியாய் இருக்கிறீர்கள்?

  சரி, கடவுளை எப்படி கண்டுபிடிப்பது? இந்த சந்தேகம் ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்களுக்கு ஏற்பட்டது. அந்த ஊர் மக்கள் எல்லாம் ஒன்றுகூடி முடிவு செய்தார்கள். புண்ணிய நதியாக இருப்பது கங்கை தானே… அதனால் கடவுள் கங்கை நதி பாய்ந்து ஓடும் இடத்தில் தான் இருக்க வேண்டும்.. நான் அனைவரும் கடவுளைக் கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்து கங்கை கரைபுரண்டோடும் திசையை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
  ஒரு கிராமமே கடவுளைத் தேடிப் புறப்பட்டுக் கொண்டிருப்பதை அந்த ஊர் பெரியவர் பார்த்தார். தம் கிராம மக்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை எல்லாம் விட்டு விட்டு கடவுளைத் தேடிச் செல்வதை அறிந்து, மிகவும் சந்தோஷமாக தனது குதிரையில் ஏறி அவர்களை சோக்கி சென்றார். 

  God

  சில மணி நேரத்தில் கடவுளைத் தேடி சென்றுக் கொண்டிருந்தவர்களைக் கண்டுப் பிடித்ததும், தனது குதிரையில் இருந்து கீழே  இறங்கிய அவர் அவர்களிடம் சென்று, “இறைவனைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்” என்று வாழ்த்தினார். மீண்டும் தனது குதிரையில் ஏறி அமர்ந்தார். தனது கிராமத்துக்கு திரும்பாமல், இப்போது அவர்கள் செல்லும் வழியிலேயே தனது குதிரையை செலுத்தத் துவங்கினார். அவர் ஊர் திரும்பாமல் தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.
  அவர்களில் ஒருவர், “பெரியவரே! ஊர் திரும்பாமல் எங்களுக்கு முன்னால் செல்கிறீரே?” என்று கேட்டார்கள்.
  “என்னுடைய குதிரையைத் தேடி வந்தேன். வழியில் உங்களைப் பார்த்து வாழ்த்தினேன். மீண்டும் குதிரையைத் தேடிப் புறப்பட்டு விட்டேன். குதிரையைக் கண்டு பிடித்த பின்பே ஊர் திரும்புவேன். குதிரை கிடைக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்” என்றார்.
   இதைக் கேட்ட அவர்கள் “குதிரை மீது அமர்ந்த படியே குதிரையைத் தேடுகிறாரே. இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்.” என்று எண்ணிச் சிரித்தார்கள்.
  “ஏன் சிரிக்கிறீர்கள்?” 
  குதிரையின் மீது அமர்ந்து இருக்கிறீர்கள். உம் கண் அருகிலேயே குதிரை இருக்கிறது. குதிரையைத் தேடிப் போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது” என்றான் அவர்களில் ஒருவன்.
  உடனே அவர் “நீங்கள் இறைவனைத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் இறைவனைத் தேடி அலைகிறீர்கள். நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேனா என்றார்.
  நம்மில் பலரும் இப்படித்தான் நமக்குள் இருக்கும் கடவுளைக் கண்டுக் கொள்ளாமல், வெளியில் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்…