“கடனை கொடு ,இல்லேன்னா உயிரை எடு “திருநங்கையோடு வாய் தகராறில் ஈடுபட்டதன் விளைவு… 

  0
  1
  representative image

  கர்நாடகா மாநிலம், சுப்ரமணியபுரா பகுதியில் விஜ்ஜி என்ற திருநங்கை தனது தோழிகளோடு தங்கியிருந்தார். அவர் பாலியல் தொழில் மூலம் வருமானம் ஈட்டி வந்தார், அவருக்கு அருண்குமார் மற்றும் ஸ்ரீநாத் என்ற இரு நணபர்கள் இருந்தனர். அவர்களிடம் விஜ்ஜி கொஞ்சம் பணம் கடன் வாங்கியுள்ளார்.

  பெங்களூருவில் சுப்ரமணியபுரா பகுதியில் வசிக்கும் விஜி என்ற திருநங்கை தனது நணபர்களோடு ஏற்பட்ட பணதகராறில் குத்தி கொலை செய்யப்பட்டார்.

  கர்நாடகா மாநிலம், சுப்ரமணியபுரா பகுதியில் விஜ்ஜி என்ற திருநங்கை தனது தோழிகளோடு தங்கியிருந்தார். அவர் பாலியல் தொழில் மூலம் வருமானம் ஈட்டி வந்தார், அவருக்கு அருண்குமார் மற்றும் ஸ்ரீநாத் என்ற இரு நணபர்கள் இருந்தனர். அவர்களிடம் விஜ்ஜி கொஞ்சம் பணம் கடன் வாங்கியுள்ளார்.

  murder

  செவ்வாய்க்கிழமை இரவு அந்த கடனை அவர்கள் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு முற்றியுள்ளது. அப்போது அருண்குமாரும், ஸ்ரீநாத்தும் விஜ்ஜியை பலமாக தாக்கியும் ,கத்தியால் குத்தியுமுள்ளனர். இதனால் பலத்த காயமுற்ற அவரை அவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வழியில் இறந்தார்.
  அதனால் பயந்து போன அவர்கள் அவரை அருகிலுள்ள ஆட்டோ ஒன்றில் தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
  போலீசார் அவரின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி, கொலை செய்த குற்றவாளிகளான அருண்குமாரையும், ஸ்ரீநாத்தையும் கைது செய்தனர்.