கடனை அடைக்க ஏ.டி.எம்மை உடைத்த இளைஞர்! அபாயமணியால் கையும் களவுமாக சிக்கிய பரிதாபம்… 

  0
  4
  Thief

  சென்னை முகப்பேரில் அரிசி கடை நடத்தி அதிக கடன் ஏற்பட்டதால் கடனை அடைக்க இளைஞர் ஒருவர் ஏ.டி.எம்மை உடைத்துள்ளார். 

  சென்னை முகப்பேரில் அரிசி கடை நடத்தி அதிக கடன் ஏற்பட்டதால் கடனை அடைக்க இளைஞர் ஒருவர் ஏ.டி.எம்மை உடைத்துள்ளார். 

  ஜெ.ஜெ.நகர் 10ஆவது பிளாக்கில் உள்ள ஆந்திரா வங்கி ஏடிஎம்மை அரூரைச் சேர்ந்த சிலம்பரசன் உடைக்க முயன்றுள்ளார். அப்போது அபாயமணி ஒலித்ததால் மும்பையில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்திலிருந்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கொடுக்க அடுத்த நொடியே சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். அங்கு சுத்தியல், கிரில்கட்டிங் இயந்திரம் கொண்டு ஏ.டி.எம்மை உடைக்க இளைஞர் முயற்சித்துள்ளார்.

  ATM

  அவரை பிடித்து விசாரித்ததில் அவர் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து முடித்த சிலம்பரசன் என்றும், நெற்குன்றத்தில் அரிசிக்கடை வைத்து நஷ்டமடைந்ததாகவும் தெரியவந்தது. சுமார் 6 லட்சம் கடன் ஏற்பட்டுவிட்டதால் அதனை அடைக்க ஏ.டி.எம்மை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார்.