கடந்த ஆண்டு போகியை விட இந்த ஆண்டின் காற்று மாசு குறைவு: தமிழக அரசு தகவல்

  0
  2
  fog

  கடந்த ஆண்டு போகிப்பண்டிகையுடன் ஒப்பிடம் போது, நடப்பு ஆண்டில் காற்றின் மாசு அளவானது குறைந்துள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

  சென்னை: கடந்த ஆண்டு போகிப்பண்டிகையுடன் ஒப்பிடம் போது, நடப்பு ஆண்டில் காற்றின் மாசு அளவானது குறைந்துள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

  வருடா வருடம் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை மக்கள் எறிப்பதால், காற்று மாசு ஏற்படுவது வழக்கம். இப்படி காற்றின் மாசு அதிகரிப்பதால், சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழலில் கடும் பாதிப்புகள் ஏற்படுவதை காண முடிந்தது.

  bhogi

  அதை தவிர்க்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்னெடுத்து வருகிறது. அதேபோல், காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, மாசு கட்டுப்பாடு வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

  அந்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த ஆண்டு போகிப்பண்டிகையை விட இந்த ஆண்டு 40% வரை காற்றின் மாசு அளவானது குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

  மேலும், இந்த ஆண்டு விமான புறப்பாடு மற்றும் வருகை போக்குவரத்தில்,எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.