கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட திமுக நிர்வாகி படுகொலை…குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!

  0
  1
   சொரிகுப்பன்

  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். 

  காசிமேடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சொரிகுப்பன். திமுக நிர்வாகியும், மீனவருமான இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் சீட்டுகட்டு ஆடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மக்கும்பல் சொரிகுப்பனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சொரிகுப்பனை அப்பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். 

  ttn

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காசிமேடு போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த அட்டு ரமேஷ் என்பவரை  கைது செய்தனர்.  அதில்,  ரமேஷ்  அவரது கூட்டாளிகளும் அப்பகுதியில் கஞ்சா மற்றும் மாவா, போதை பொருட்கள் விற்று வந்துள்ளனர். இதை சொரிகுப்பன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி ரமேஷின் மனைவியை சொரிகுப்பன் திருமணத்தைத் தாண்டிய உறவுக்கு அழைத்துள்ளார். இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷ்  சொரிகுப்பனை  கொலை செய்துள்ளார். 

  ttn

  கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள  சம்பத் (25), ராகேஷ்(18), சந்தோஷ் (19) ஆகியோரை போலீசார் தேடி வருவது  குறிப்பிடத்தக்கது.