கஞ்சா புகைப்பதை இதனால் தான் நிறுத்தினேன்: இயக்குநர் பாக்யராஜ் பரபரப்பு பேச்சு!

  16
  பாக்யராஜ்

  இதில் இயக்குநர்கள்  பாக்யராஜ், மிஷ்கின், தயாரிப்பாளர் ராஜன் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர். 

  அறிமுக இயக்குநர் எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் மரிஜூவானா. இப்படத்தில் அட்டு படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரித்விக் நடித்துள்ளார். கஞ்சா பாதிப்புகளைச் சொல்லும் இப்படத்தின்  இசைவெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

  ttn

  இதில் இயக்குநர்கள்  பாக்யராஜ், மிஷ்கின், தயாரிப்பாளர் ராஜன் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர். 

  ttn

  இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், ‘நான் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா அடித்திருக்கிறேன். அது ஆனந்தமாக இருக்கும். ஒருமுறை கஞ்சா போதையில் ஒன்று யோசித்தேன். வாழ்க்கையில்  சாதிக்கவேண்டும் என்று நினைத்தோம். இப்படி இருந்தால் எப்படி சாதிக்கமுடியும். என்று நினைத்து அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன். இந்த படம்  கஞ்சா பாதிப்புகளைச் சொல்லும் படம் என்பதால் வெற்றிபெற என் வாழ்த்துகள்’  என்றார்.