கஜா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு உதவிய ரித்விகா ஆர்மி!

  0
  15
  army

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிக் பாஸ் வின்னர் ரித்விகா ஆர்மியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  புதுக்கோட்டை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிக் பாஸ் வின்னர் ரித்விகா ஆர்மியினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர அரசு, தனியார், தன்னார்வ ஆர்வலர்கள் எனப்  பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

  இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகாவின் ஆர்மியினர்  டெல்டா மாவட்டங்களுக்கு சென்று தன்னலம் அறியாது நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.