ஓ.பி.எஸை போட்டுக் கொடுத்த எடப்பாடி… சிக்க வைத்து பாடுபடுத்த அமித் ஷா உறுதி..!

  0
  2
  அமித் ஷா

  தமிழகத்தில் போராட்டம் என்ற பெயரில் கலகம் நடத்துகிறார்களா என்று பார்க்கலாம். அப்படி ஒருவர் சிக்கினால் போதும் அவர் படும்பாட்டை வைத்து மற்ற சிறு குழுக்கள் எல்லாம் ஒதுங்கி ஓடிவிடும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

  எடப்பாடி பழனிசாமி  தனது வலதுகரமான அமைச்சர் ஜெயகுமாருடன் டெல்லி சென்றார்.  அரசு விஷயங்களில் தலைமை செயலாளரும் பங்கேற்றார். அரசியல் விஷயங்களில் அமைச்சர் ஜெயகுமாரை கூட்டிச் சென்று  தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள அமித் ஷா, மோடியிடம் முறையிட்டு இருக்கிறார். EPS

  அப்போது ’’ஓ.பன்னீர்செல்வத்தை நம்பாதீங்க. அவரு கூட இருந்தே குழி பறிப்பாரு. இப்போது எனக்கு அதுதான் நடந்துட்டு  வருது’’ என புலம்பி இருக்கிறார். அப்போது  நீண்ட நேரம் அரசியல் விஷயம் குறித்தும் பேசி இருக்கிறார். OPS

   தமிழ்நாட்டில் உள்ள சிறு சிறு குழுக்கள்தான் தேசிய அளவிலான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. அவர்களை முடக்க ஏதாவது செய்ய வேண்டும் என எடுத்துக் கூறியுள்ளார்.  இதைக் கேட்டுக் கொண்ட அமித் ஷா ‘அவங்களோட லிஸ்டை அனுப்புங்க… அந்த சிறு குழுக்களின் நிதியாதாரம் யாரிடம் இருந்து வருகிறது.OPS

  அவர்களை யார் இயக்குகிறார்கள். வெளிநாட்டில் இருந்து டிரஸ்ட் பெயரில் வரும் நிதியை வைத்து தமிழகத்தில் போராட்டம் என்ற பெயரில் கலகம் நடத்துகிறார்களா என்று பார்க்கலாம். அப்படி ஒருவர் சிக்கினால் போதும் அவர் படும்பாட்டை வைத்து மற்ற சிறு குழுக்கள் எல்லாம் ஒதுங்கி ஓடிவிடும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். கட்சியில் உங்களை மீறி எதுவும் நடக்காது’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறி அனுப்பி இருக்கிறார்.