ஓ, கவுருமென்ட்டு வேலையை ரிசைன் பண்ணிட்டு போறாருடோய்

  0
  2
   ராகவாலாரன்ஸ்,லக்ஷ்மி பாம்

  கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையை ஒட்டி ஒரு பங்களா, அதுலதான் பெரும்பாலான‌ ஷூட்டிங். ஐதராபாத்லேர்ந்து அந்தப்பட‌ ஷூட்டிங்குக்கு கூப்பிடுறாங்க, மலையாள‌த்துலேர்ந்து இந்த ஷூட்டிங்குக்கு கூப்புடுறாங்கன்னு பிரச்னை பண்ணாம எப்ப கூப்ட்டாலும் ஷூட்டிங்குக்கு வர தயாரா இருக்கும் ஹீரோயின், இதே கேட்டகிரியில‌ ஜூனியர்

  கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையை ஒட்டி ஒரு பங்களா, அதுலதான் பெரும்பாலான‌ ஷூட்டிங். ஐதராபாத்லேர்ந்து அந்தப்பட‌ ஷூட்டிங்குக்கு கூப்பிடுறாங்க, மலையாள‌த்துலேர்ந்து இந்த ஷூட்டிங்குக்கு கூப்புடுறாங்கன்னு பிரச்னை பண்ணாம எப்ப கூப்ட்டாலும் ஷூட்டிங்குக்கு வர தயாரா இருக்கும் ஹீரோயின், இதே கேட்டகிரியில‌ ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுங்க, தாயின் கருவறையில் இருக்கும்போது எப்புடி காலை வதக் வதக்குனு உதைச்சாரோ, அதே மாதிரி ரிப்பீட்டட் டான்ஸ் ஸ்டெப் போட்டு நாலு பாட்டு, ரெண்டு ஃபைட்டு, ரொம்ப முக்கியமா ஒரு பேய், இதெல்லாத்தையும் கலந்து கோலிவுட் மிக்சியில அடிச்சா ராகவா லாரன்ஸின் காஞ்சனா தயார். இந்த திரைக்கதை ஒன்லைன் ஆர்டரை மாத்திப்போட்டா காஞ்சனா 2. இப்புடி எடுக்குற படத்துக்கு கலெக்சன் மட்டும் 100 கோடி. கசக்குமா என்ன?

  laxmi bomb

  இந்தப்படத்தை ரீமேக் பண்ணுவோம் வாங்கன்னு ராகவா லாரன்ஸ் மாஸ்டரை வாயில் பீடா கறையோடு இந்திக்காரங்க கூப்பிட, ‘ஆஹா ஆல் இன்டியா ஃபேமஸ்டா நாம’ன்னு ராகவாவும் ஆசையா கிளம்பிப்போனா, ஊமைக்குத்தா குத்தி அனுப்பிட்டாய்ங்க இந்திகாரய்ங்க. கனடாவுல செட்டில் ஆகி இந்தியாவுக்கு விசாவுல வந்து நடிச்சு குமிக்கிற அக்சய் குமார் நடிப்புல,  ‘லக்ஷ்மி பாம்’னு தலைப்பு வச்சு காஞ்சனாவை எடுக்குறதாப் பேச்சு. பேசிக்கிட்டு இருக்கும்போதே படத்தோட பர்ஸ்ட் லுக் வெளியாக, ராகவாவுக்கு ஒரே ஆச்சர்யம்.

  ragava lawrence

  ‘நம்ம படத்து தலைப்பை வேற யாரோ யூஸ் பண்ணி இன்னொரு படம் எடுக்குறாங்க, அதுவும் அக்சயை வச்சே’ன்னு திகைக்க, அப்புறம்தான் புரடக்சன் பாய் சொல்லிருக்காப்டி, ‘இது உங்க படம்தான்’னு. “என்னது என் படமா? எனக்கே தெரியாமையா?” என ராகவா கொதித்துப்போய், “எனக்கு மரியாதை இல்லாத இடத்துல நான் இருக்க மாட்டேன்னு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுவிட்டு படத்தை இயக்குவதிலிருந்து வெளியேறி இருக்கிறார். இப்புடித்தான் ஏதாவது ஏடாகூடமா பண்ணி அங்கேருந்து விரட்டுவாய்ங்க. ராகவா வெளியேறியதைப் பார்த்து அவர்கள் வருத்தப்படுவார்கள்னா நினைக்கிறீங்க? கவுண்டமணி ஜோக் சொல்லி சிரித்துவிட்டு இந்நேரம் ஷூட்டிங் ஆரம்பித்திருப்பார்கள்.