ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த மாணவன் படுகொலை ! கொடூரமாக கொலை செய்து புதைத்த ரவுடி கும்பல் !

  32
  அப்துல் வாஹித்

  ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துழைக்காத 6ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
  திருச்சி அரியமங்கலம் அருகே அலியார் என்பவரின் மகன் அப்துல் வாஹித் 6ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை.

  ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துழைக்காத 6ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
  திருச்சி அரியமங்கலம் அருகே அலியார் என்பவரின் மகன் அப்துல் வாஹித் 6ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை.

  child

  இந்நிலையில் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி வீட்டிலிருந்து வெறியில் சென்ற சென்ற சிறுவன் அப்துல் மாயமாகிவிட்டான். இது குறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் அப்துல் வாஹித் ஒரு ரவுடி கும்பலுடன் ஊர் சுற்றி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை வைத்து, 
  இளவரசன், சரவணன், லோகேஷ், வீராசாமி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் சிறுவனை பன்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. இதற்கு காரணம் சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அந்த கும்பல் அழைத்துள்ளது. சிறுவன் மறுக்கவே ஆத்திரத்தில் கொலை செய்துள்ளது. இதையடுத்து அரியமங்கலம் மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு சென்ற போலீசார் அங்கு புதைக்கப்பட்டிருந்த சிறுவன்  அப்துல் வாஹித் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

  kid

  சில குழந்தைகள் படிக்க விரும்பவில்லை என அடம் பிடித்தால், படித்தால் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வரமுடியும் என அறிவுரை சொல்லி பள்ளிக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால் தேவையான சொத்து இருக்கிறது படிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை என பெற்றோர் அஜாக்கிரதையாக இருந்தால், பள்ளிக்கு செல்லாத சிறுவன் இதுபோன்ற குற்றப்பின்னணி உள்ளவர்களிடம் மாட்டி சீரழியும் என்பதை மறுப்பதிற்கில்லை.