ஓராண்டுக்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்று பற்றி எச்சரித்த பில்கேட்ஸ்!

  0
  3
  bill

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பயத்தில் உள்ளன. தங்கள் நாடுகளில் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஓராண்டுக்கு முன்பே மிகப்பெரிய வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகி உள்ளது.

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பயத்தில் உள்ளன. தங்கள் நாடுகளில் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஓராண்டுக்கு முன்பே மிகப்பெரிய வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகி உள்ளது.

  gills

  உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். தற்போது இவர் தொண்டு நிறுவனங்கள், மருத்துவ ஆய்வுக்காக நிதி ஒதுக்கி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த மருத்துவ கருத்தரங்கில் பேசிய அவர் மிகப்பெரிய வைரஸ் தொற்று பற்றிய தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது அந்த மாநாடு முடிந்து ஓராண்டான நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவை பாதித்துள்ளது. 

  bill

  மசாசூட்ஸில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மருத்துவ கருத்தரங்கில் பேசிய அவர், “நான் எல்லாம் நன்மைக்கு என்று நினைக்கக்கூடிய நபர். ஆனாலும் இந்த உலகம் இன்னும் ஒரு விஷயத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்று நான் கருதுகிறேன். அது மிகப்பெரிய தொற்றுநோய் முன்தயாரிப்புதான். உயிர் வேதி தொற்று பாதிப்பு, அபாயம் ஏற்பட்டது என்றால் அதிலிருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை. எப்படி உலக நாடுகள் எல்லாம் போருக்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்கின்றனவோ, அது போல மிகப்பெரிய தொற்றுநோய்களை எதிர்கொள்ளவும் தயார்செய்ய வேண்டும்” என்றார்.
  பில்கேட்சின் எச்சரிக்கை எந்த அளவுக்கு நிஜமாகி உள்ளது என்று உலக நாடுகள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளன. தொற்றுநோய்களைக் கையாள பிரத்தியேக மருத்துவ வசதிகளை ஆயத்த நிலையில் வைத்திருந்தால் கொரோனா வைரஸ் தொற்று கூட இவ்வளவு வேகமாக பரவியிருக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  china

  பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 1000ம் படுகை கொண்ட மருத்துவமனையை சீனாவால் உருவாக்க முடிந்தது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் அது எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மக்களை நம்ப வைக்க அரசாங்கங்கள் முயற்சி செய்யுமே தவிர, அதைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் இந்த அளவுக்கு வேகமாக நடக்குமா என்று தெரியாது. இனியாவது ஒவ்வொரு நாடும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.