ஓபிஎஸ் மகனின் வெற்றியை ரத்து செய்யவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

  0
  2
  ரவீந்திரநாத்

   ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட  தேனி  தொகுதியில் மட்டுமே வெற்றிகண்டது.

  சென்னை: தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

  hc

  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட  தேனி  தொகுதியில் மட்டுமே வெற்றிகண்டது. இருப்பினும் இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ளதால் ஆட்சியை இன்னும் 2 வருட காலம் அதிமுகவே தக்கவைத்துள்ள நிகழ்வு நடந்துள்ளது. 

  ravi

  இந்நிலையில் தேனி  எம்பி ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், எம்பி ரவீந்திரநாத் பணப்பட்டுவாடா செய்து தான் வெற்றிபெற்றுள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனால் அவரது வெற்றியை ரத்து செய்யவேண்டும் என்று கூறி வழக்குத்தொடுத்துள்ளார்.