ஓபிஎஸை வழிமறித்த மாணவி…! பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி..! அதிர்ச்சியில் அ.தி.மு.க-வினர்…!

  0
  1
  O Panneerselvam

  மதுரை அலங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கல்லூரி மாணவிகள் இடை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  மதுரை :

  மதுரை அலங்காநல்லூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கல்லூரி மாணவிகள் இடை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நாடாளுமன்ற வேட்பாளரான தன் மகனுக்கு ஆதரவாக மதுரை அலங்காநல்லூரில் பிரச்சாரத்தை தொடங்கிய ஓபிஎஸ்  நடந்தே ஓட்டுகேட்டு சென்றிருக்கிறார். அப்போது அங்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அதில் இரு மாணவிகள் தைரியமாக, ”சார் நீங்க துணை முதல்வர்தானே கொஞ்சம் நில்லுங்க” என்றதும் சிரித்து கொண்டே அருகில் வந்த ஓ.பி.எஸ்,  ”என்னம்மா நல்லா படிங்க பரிச்சைக்கு போறீங்களா?” என்றதும் ”ஆமா சார்  என்னை போன்ற மகள் இல்லையா? உங்களுக்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

  ops

   
  ஏன் கேட்கிறீர்கள் என்ற  ஓ.பி.எஸ் – இன் கேள்விக்கு,  ” பொள்ளாச்சியில் என்னை போன்ற மாணவிகளை சீரழிச்சிருக்கிறாங்க. கடந்த 7வருசமா நடந்ததாக சொல்கிறார்கள். கடந்த வருடம் புகார் கொடுத்தும் அதை நீங்கள் கண்டுகொள்ளவில்லை ஏன்? உங்க கட்சிகாரர்களே குற்றவாளியாக இருப்பதாலா? அப்ப கட்சிதான் உங்களுக்கு முக்கியமா? மக்கள் இல்லையா? உங்களிடம் தானே நாட்டை ஒப்படைத்திருக்கிறோம்.பதில் சொல்லிட்டு போங்க சார் எங்க அப்பாவும் உங்க கட்சி தான். எங்க வீட்டில் கூட அம்மா படம்தான் இருக்கும். என்ன சொல்றீங்க.” என்று வழியை மறித்து பேச அருகிலிருந்தவர்கள் அந்த மாணவியை அதட்ட, அதைத் தடுத்த  ஓ.பி.எஸ் “நீ சொல்றது சரி தான்மா. அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. தைரியமாக வந்து கேள்வி கேட்கிற பாரு இதுதான் ஜனநாயகம்… உன் தைரியத்தை பாராட்டுகிறேன். ” என்று சொல்லி கொண்டே நகர்ந்திருக்கிறார்.

  ops

   
  விஷயம் கேள்விப்பட்டு பதறியடித்து வந்த அமைச்சர் உதயகுமாரைத் தடுத்து நிறுத்திய  ஓ.பி.எஸ். பிரச்சாரத்தை பார்ப்போம் உடனே ஜீப்பை கொண்டு வந்து அதில் ஏறி பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.

  அவர் கிளம்பியுடன் அந்த மாணவியின் அருகில் சென்று விசாரித்த பத்திரிக்கை நிருபர் ஒருவரிடம், அந்த பெண்களின் வீடியோ பார்த்து கொதித்துப் போய் விட்டதாகவும் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் தெரிவித்திருக்கிறார் அந்த மாணவி.