ஓட்டு போட்ட சின்மயியை கலாய்த்த பிரபல இயக்குநர்: கூட்டு சேர்ந்த ரசிகர்கள்!

  21
   சின்மயி

  பாடகி சின்மயி வாக்களித்துவிட்டுப் பதிவிட்டிருந்த புகைப்படத்தை பார்த்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் நக்கலடித்துள்ளார். 

  சென்னை:  பாடகி சின்மயி வாக்களித்துவிட்டுப் பதிவிட்டிருந்த புகைப்படத்தை பார்த்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் நக்கலடித்துள்ளார். 

  chinmayi

  தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்  நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றனர். அது மட்டுமல்லாமல், வாக்கை செலுத்தியதற்கான அடையாளமான விரலில் உள்ள மையுடன் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

  chinmayi

  அந்த வரிசையில் பாடகி சின்மயி தான் வாக்களித்த பின், விரல் மையுடன் உள்ள புகைப்படத்தைப் பதிவிட்டு, கடவுள் தான் நாட்டைக் காப்பாற்றுவார் என்று பதிவிட்டிருந்தார்.

   

  அவரது புகைப்படத்தைப் பார்த்து விட்டு கருத்து தெரிவித்த தமிழ்ப்படம் இயக்குநர்  சி.எஸ்.அமுதன், சின்மயி அணிந்திருந்த கண்ணாடியை குறிப்பிட்டுக் கிண்டல் செய்துள்ளார். அதாவது, அவர் அணிந்திருந்த பெரிய கண்ணாடியைக் கலாய்த்த அவர், இந்த கண்ணாடியை மீண்டும் எப்படி காரில் பொருத்துவீர்கள் என்று பதிவிட்டுள்ளார். 

  cs amudhan

   சி.எஸ்.அமுதனின் இந்த விமர்சனத்தைப் பார்த்த ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு சின்மயியை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது. 

  இதையும் வாசிக்க: விஜய்சேதுபதியுடன் கேரவனில் நடனம் ஆடும் காயத்ரி: வைரலாகும் வீடியோ!