‘ஓட்டு எல்லாம் சரியான போங்கு’: தர்ஷன் எவிக்ஷனால் கடுப்பான பிரபலங்கள்!

  0
  3
  தர்ஷன்

  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியிலிருந்து தான் மீளவில்லை என்று இயக்குநர்  சேரன் கூறியுள்ளார். 

  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியிலிருந்து தான் மீளவில்லை என்று இயக்குநர்  சேரன் கூறியுள்ளார். 

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் நேற்று வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இறுதிப் போட்டியில்  தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று சக போட்டியாளர்களே  கூறிவந்த நிலையில் தர்ஷன் வெளியேறியது பலரையும்  சோகத்தில் ஆழ்த்தியது.

  tharshan

  எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக் பாஸ் கூறியது நடந்துவிட்டதாகவும், இந்த நிகழ்ச்சி மக்கள்  வாக்குகளின் அடிப்படையில் நடக்கிறதா? அல்லது  நிகழ்ச்சிக்குழுவினால் கட்டமைக்கப்படுகிறதா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. 

  shanthanu

  இந்நிலையில் தர்ஷன் வெளியேற்றம் குறித்து பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் நடிகர் சாந்தனு , ‘அட போங்கயா இந்த ஓட்டு எல்லாம் சரியான போங்கு’ என்று கூறியுள்ளார். நடிகை ஸ்ரீப்ரியாவோ, ஐயோ மறுபடியும் தப்பா ஓட்டுப் போட்டுட்டாங்களோ?தர்ஷன் வெளியேற்றம் சற்று ஏமாற்றம் தான்!” என்று பதிவிட்டுள்ளார்.

   

  பிக் பாஸ் போட்டியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய இயக்குநர் சேரன், ‘ஆகச்சிறந்த உழைப்பைக் கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகிலிருந்து பார்த்தவன் நான். அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.