ஓட்டுநரைக் கொன்று காரைக் கடத்திய பலே பெண்! சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார்!

  0
  1
  நாகநாதன்

  சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் நாகநாதன். கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து கடந்த 6ம் தேதி குற்றாலத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி ஒரு கும்பல் வாடகைக்கு கார் எடுத்திருக்கிறார்கள். அந்த காரை நாகநாதன் ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த கும்பல் நாகநாதனுடன் காரில் ஏறி திட்டமிட்டப்படியே குற்றாலத்திற்கு சென்றிருக்கிறார்கள். அதன் பின் கடந்த 8-ஆம், கால் டாக்சியின் உரிமையாளரை தொடர்பு கொண்டு, மறுநாள் பணி முடிந்து விடுவதாகவும், சென்னைக்கு அடுத்த நாள் திரும்பி விடுவதாகவும் நாகநாதன் செல்போனில் பேசியிருக்கிறார்.

  சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் நாகநாதன். கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து கடந்த 6ம் தேதி குற்றாலத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி ஒரு கும்பல் வாடகைக்கு கார் எடுத்திருக்கிறார்கள். அந்த காரை நாகநாதன் ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த கும்பல் நாகநாதனுடன் காரில் ஏறி திட்டமிட்டப்படியே குற்றாலத்திற்கு சென்றிருக்கிறார்கள். அதன் பின் கடந்த 8-ஆம், கால் டாக்சியின் உரிமையாளரை தொடர்பு கொண்டு, மறுநாள் பணி முடிந்து விடுவதாகவும், சென்னைக்கு அடுத்த நாள் திரும்பி விடுவதாகவும் நாகநாதன் செல்போனில் பேசியிருக்கிறார். ஆனால், நாகநாதன்  கூறியபடி சென்னைக்கு திரும்பவில்லை.

  nagathan

  சொன்னபடி காலையில் வராததால், ஏன் தாமதமாகிறது என்று விசாரிப்பதற்காக கால்டாக்சி உரிமையாளர் நாகநாதனை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட போது, நீண்ட நேரமாகவே நாகநாதனின் செல்போன்  சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து முயற்சித்து பார்த்து விட்டு, என்ன செய்வது என்று தெரியாமல், அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
  இந்நிலையில் மதுரை கொட்டாம்பட்டியில் சாலையின் ஓரமாக அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுத்து மீட்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அது கால்டாக்சி ஓட்டுநர் நாகநாதனின் சடலம் என தெரிய வந்தது. இதையடுத்து கால்டாக்சியை வாடகைக்கு எடுத்த கும்பல் ஓட்டுநர் நாகநாதனை கொலை செய்து விட்டு காரை எடுத்துச் சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில் சென்னை மற்றும் மதுரை போலீசார் இணைந்து இந்த கொலை விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர்.

  jayasudha

  போலீசாரின் இந்த விசாரணையில், சென்னையிலிருந்து கிளம்பிய காரை வாடகைக்கு எடுத்துச் சென்ற கும்பல் திருச்சி வழியாகச் சென்றதும், திருச்சியில் ஓட்டுநர் நாகநாதன் சாலையைக் கடக்கும் சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகியுள்ளன. மேலும் போலீசார் அந்தக் கும்பலில் இருந்த திருச்சியைச் சேர்ந்த ஜெயசுதா என்கிற பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து சென்றிருக்க வாய்ப்புள்ள இடங்கள் எது எது எனவும், அதன் அடிப்படையில் அவர்கள் கடந்து சென்ற பாதைகளில் உள்ள வேறு சி.சி.டி.வி. காட்சிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஜெயசுதாவின் புகைப்படத்தைக் கொண்டும் போலீசார் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே மதுரையில் வாடகைக் காரை பதிவு செய்து ஓட்டுநரைக் கொன்று விட்டு, காரை கடத்தியது தொடர்பாக இரு வழக்குகள் இன்னும் விசாரணையில் இருந்து வருவதாகவும், நாகநாதன் கொலை வழக்கில் தேடப்படுபவர்களுக்கும் அந்த கார் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.