ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது! எங்களுக்கு வேற வழி தெரியல- பிரதமர் மோடி 

  0
  2
  Modi

  இந்தியாவில் கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் மொத்தமாக 5,360 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 184 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 76% பேர் ஆண்கள், 24% பெண்கள் என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 63% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

  modi

  இந்நிலையில் இன்று  மாநில அரசுகளின் நிர்வாகிகள் மற்றும் வல்லுநர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் நடத்திய ஆலோசனை நடத்தினார். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என அரசு செயல்படுகிறது. இக்கட்டான இந்த காலகட்டத்தில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன” எனக்கூறினார்.