ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடக்கம்!

  0
  12
  Tokyo Olympics

  சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

  ttn

  இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஜப்பானில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை இந்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.