‘ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கும் ஒரே நாளில் திருமணம்’: வியக்க வைக்கும் குடும்பம்!

  0
  4
  ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

  இவர்களுக்குக் கடந்த 1995 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

  கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார்-ரமாதேவி தம்பதி. இவர்களுக்குக் கடந்த 1995 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு  உத்ரஜா, உதரா, உதாரா, உத்தமா மற்றும் உத்ராஜன் என பெயர் வைத்து மகிழ்ந்துள்ளனர்  அந்த தம்பதி. காரணம்  இவர்கள் உத்திர நட்சத்திரத்தில்  பிறந்ததால் இவர்களுக்கு இப்படி பெயர் வைத்துள்ளனர்.

  kerala quintuplets

   இதையடுத்து இவர்களின் ஒன்பதாவது வயதில் இவர்களின் தந்தை  பிரேம்குமார் எதிர்பாராமல் இறந்து விட ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதன்பின்னர் ரமாதேவி 5 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாகியுள்ளார்.

  kerala quintuplets

  இதில் ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளராகவும், இரண்டுபேர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், ஒருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் உள்ளனர். 

  kerala quintuplets

  இந்நிலையில்  ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நான்கு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க அவரது தாய் முடிவு செய்துள்ளார். இதனால் ஏப்ரல் மாதம் 26ம் தேதி 4 சகோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம்  முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகளை இவர்களின் சகோதரர் உத்ராஜன் கவனித்து வருகிறார். இதனால் அவர்களின் வீடு விழா கோலம் பூண்டுள்ளது.