ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா… 100ஐ தாண்டிய தமிழகம்!

  0
  2
  பீலா ராஜேஷ்

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி 127 ஆக உள்ளது. இன்று கண்டறியப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

  மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டில்  1,131 பேர் பங்கேற்றுள்ளனர்; 1,131 பேரில் 515 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தி விட்டோம்: மீதமுள்ள 616 பேரை தேடி வருகிறோம். அவர்கள் தாங்களாக முன்வந்து சிகிச்சை பெற வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்கலாம்” என்றார்