ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம்… வேற யாருமல்ல நம்ம அமேசான் அண்ணாச்சிதான்

  0
  2
  ஜெப் பிசோஸ்

  ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்த பிறகும் உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ்.

  அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரால் உலக நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தக நிலவரம் கவலைகிடமாகவே உள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று அனைத்து நாடுகளின் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

  பங்குகளின் விலை சரிந்ததால் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசானின் தலைவர் ஜெப் பிசோஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி  உள்பட புளுபெர்க் கோடீஸ்வரர்கள் குறீயீட்டு பட்டியலில் உள்ள 21 கோடீஸ்வரர்களும் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் கோடி முதல் நஷ்டம் அடைந்தனர். 

  மார்க் ஜூக்கர்பெர்க்

  அதில் அதிகபட்சமாக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜெப் பிசோஸ் ரூ.24 ஆயிரம் கோடியை இழந்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஜெப் பிசோஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7.8 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. 

  முகேஷ் அம்பானி

  அடுத்ததாக பெர்னார்ட் அர்நால்ட் ரூ.22 ஆயிரம் கோடியை கோட்டை விட்டு விட்டார். பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு. இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு அன்று நேரம் சரியில்லை போல் தெரிகிறது. அன்று ஒரே நாளில் மட்டும் முகேஷ் அம்பானிக்கு ரூ.14 ஆயிரம் கோடி கையை கடித்து விட்டது.