ஒரே நாளில் புதிதாக 781 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு….. தொற்று நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,738ஆக உயர்வு…

  0
  1
  மருத்துவ பரிசோதனை

  நேற்று மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 781 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,738ஆக உயர்ந்துள்ளது.

  நம் நாட்டில் தொற்று நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலங்களின் அறிக்கையின்படி,  இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் புதிதாக 781 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,738 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 483 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 248 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதேசமயம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வலைதளத்தில் இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் குறைவாகவே உள்ளது.

  கொரோனா வைரஸ்

  மாநிலங்கள்    கொரோனா பாதித்தவர்கள்
  மகாராஷ்ரா        1,364
  தமிழ்நாடு             834
  டெல்லி                 720
  தெலங்கானா       471
  ராஜஸ்தான்          463
  உத்தர பிரதேசம்    424
  இதர பகுதிகள்      2,462
  மொத்தம்               6,738

  கொரோனா வைரஸ் இறப்பு

  மாநிலங்கள்    கொரோனாவுக்கு பலியானவர்கள்
  மகாராஷ்ரா          097
  தமிழ்நாடு              008
  டெல்லி                   012
  தெலங்கானா        012
  ராஜஸ்தான்          008
  உத்தர பிரதேசம்   004
  இதர பகுதிகள்      107
  மொத்தம்               248