ஒரே நாளில் சவரனுக்கு ரூ.552 ‘குறைந்தது’ தங்க விலை!

    0
    6
    கர்ப்பிணி

    இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடியாக விலை உயர்ந்து ரூ.31 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று மட்டுமே தங்க விலை சவரனுக்கு ரூ.976 உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. 

    gold

    இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.69 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,097க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.32,776க்கு விற்கப்படுகிறது. 

    மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.52.70க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.600 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.52,700க்கு விற்கப்படுகிறது.