ஒரே நாளில் கொரோனாவுக்கு 27 பேர் பலி….மொத்த பலி எண்ணிக்கை 124ஆக உயர்ந்தது….

  0
  4
  கொரோனா வைரஸ்

  நம் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசுக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து இந்த கொடிய தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது.

  சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் உலகம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

  சுகாதார பணியாளர்கள்
  நம் நாட்டிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 553 கொரோனா நோயாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். மேலும் 27 பேர் இறந்தள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,218 ஆகவும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆகவும் உயர்ந்துள்ளது.

  பொதுமக்கள்

  அதேசமயம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,577ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 84 ஆகவும் உள்ளது.