ஒரே கையெழுத்து…இளைஞர்களின் தலையெழுத்தை மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி: தமிழ்நாட்டுல அது நடக்குமா?

  0
  1
   ஜெகன்மோகன் ரெட்டி

  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்புக்குப் பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது

  ஆந்திரா: தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆந்திர மாநிலத்தைச்  சேர்ந்தவர்களுக்கே   75% பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

  jagan

  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்புக்குப் பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது . அந்த வகையில் ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், தனியார் நிறுவனங்கள்,  தொழிற்சாலைகள்,  கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் நிறுவனங்கள் என அனைத்து வேலைவாய்ப்பு நல்கும் இடங்களிலும் ஆந்திர மாநிலத்தைச்  சேர்ந்தவர்களுக்கே   75% பணியிடங்களை ஒதுக்கீடு  செய்ய வேண்டும் என்றும் இது அனைத்து வித பணிகளுக்கும் பொருந்தும் என்றும் கோரப்பட்டுள்ளது.

  job

  ஒருவேளை  தகுதியான கிடைக்காத  நிலை ஏற்பட்டால்,  நிறுவனங்கள் அரசுடன் இணைந்து உள்ளூர் மக்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதுகுறித்த மொத்த விவரத்தையும்  அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர அரசின் இந்த சட்டத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

  job

  முன்னதாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையின் பணியிடங்களில் வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், வெறும் 165 இடங்களை மட்டுமே தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. தமிழ்நாட்டில் எங்குச் சென்றாலும் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பு  அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில், இப்படி ஒரு சட்டம் தமிழகத்தில் கொண்டு வந்தால் வேலைவாய்ப்பின்மை  என்ற ஒன்று வரும் வருடங்களில் குறைய வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.