ஒரு வழியாக ‘பொன்னியின் செல்வன்’ சீரிஸ் குறித்து அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார் மகள்!

  8
   பொன்னியின் செல்வன்

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சவுந்தர்யா ரஜினிகாந்த்  ‘பொன்னியின் செல்வன்’வெப்  சீரிஸ் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சவுந்தர்யா ரஜினிகாந்த்  ‘பொன்னியின் செல்வன்’வெப்  சீரிஸ் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக இயக்குநர்கள் பலரும் முயற்சித்து வரும் நிலையில், சவுந்தர்யா அதனைத் திரைப்படமாக அல்லாமல் விதியசமாக சிந்தித்து வெப் சீரிஸாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

  இதை  வீடியோ ஸ்ட்ரீம் நிறுவனமான எம்எக்ஸ் பிளேயர் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. மேலும் சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் கனவு புராஜெக்ட்டான இந்த வெப் சீரிஸ் தமிழ்  மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், போஜ்புரி போன்ற  மொழிகளிலும் உருவாகவுள்ளது. இந்த நிலையில் அவ்வப்போது இதுகுறித்த அப்டேட் கொடுக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த் தற்போது ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

  அதில் ‘பொன்னியின் செல்வன் – இது தான் காவியம். இதை செய்ய வேண்டும், சரியாக செய்ய வேண்டும். ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் தெளிவுடன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வரும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

   

  முன்னதாக சவுந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற சரித்திர படத்தை இயக்கிய அனுபவம் இருப்பதால்   ‘பொன்னியின் செல்வன்’ வெப் சீரிஸ்யும் சிறப்பாக உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.