ஒரு லட்சம் பேரை பணியமர்த்தும் அமேசான் – ஒரு மணி நேர சம்பளம் 17 டாலர்கள்

  0
  1
  amazon

  அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் ஒரு லட்சம் பேரை கூடுதலாக பணியமர்த்துகிறது.

  வாஷிங்டன்: அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் ஒரு லட்சம் பேரை கூடுதலாக பணியமர்த்துகிறது.

  கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 7988-க்கும் மேற்பட்டோர் உலகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரம் கடந்துள்ளது. அதில் இதுவரை உலகில் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

  amazon

  இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுவாக மக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்கெட், சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு போவதை யாரும் விரும்பவில்லை. வீட்டில் இருந்தே தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து டோர் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்கிறார்கள்.

  அதனால் டெலிவரி செய்யும் ஆட்களுக்கும், கிடங்கில் வேலை செய்யும் ஆட்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது. அந்த வகையில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒரு லட்சம் பேரை கூடுதலாக பணியமர்த்துகிறது. அவர்களுக்கு ஒரு மணி நேர சம்பளமாக 17 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.