‘ஒரு நாள் நள்ளிரவுப் பார்ட்டிக்குப் போனபோது’….நடிகை நந்திதா ஸ்வேதா வெளியிடும் பகீர் ரகசியம்…

  14
  நடிகை நந்திதா ஸ்வேதா

  ‘சினிமாக்காரர்களின் நள்ளிரவுப்பார்ட்டிகள் இப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் ஒரே ஒரு முறை மட்டும் நள்ளிரவுப் பார்ட்டிக்குப் போய்விட்டு அத்துடன் அந்த வழக்கத்தை நிறுத்திக்கொண்டேன்

  ‘சினிமாக்காரர்களின் நள்ளிரவுப்பார்ட்டிகள் இப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் ஒரே ஒரு முறை மட்டும் நள்ளிரவுப் பார்ட்டிக்குப் போய்விட்டு அத்துடன் அந்த வழக்கத்தை நிறுத்திக்கொண்டேன்’ என்கிறார் நடிகை நந்திதா ஸ்வேதா.நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். வேறு வழி?

  nandita

  ’அட்டகத்தி’ படம் மூலம் அறிமுகமான நந்திதா, ’எதிர் நீச்சல்’, ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்கள் மூலம் கவனிக்கப்பட்டார்.சமீபத்தில் ரிலீஸ் ஆகி அட்டர்ஃப்ளாப் ஆன  ’தேவி 2’ படத்தில் நடித்தவர் அடுத்து 2 படங்களில் தனி கதாநாயகியாக நடிக்கிறார்.

  சமீபகாலங்களில் தமிழ்ப்படங்களில் அதிகம் பார்க்கமுடியவில்லையே என்று நந்திதாவிடம் கேட்டப்போது,’’சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றன. அந்தமாதிரியான படங்களில் நடிப்பது  போரடித்ததால் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். சில தெலுங்குப்படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே நான் பிசியானதும் உண்மைதான். 

  nandita

  தமிழ்ப்படங்களில் என்ன காரணத்தாலோ எனக்கு இயல்பான வேடங்களே கிடைத்தன. ஆனால் தெலுங்கில் நல்ல கிளாமரான ரோல்கள் கிடைத்தன. தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்த அதுவும் ஒரு காரணம். தமிழில் தேவி2’வில் நல்ல கிளாமரான ரோலில் தான் நடித்திருந்தேன். ஆனால் அப்படம் தோல்வி அடைந்ததால் எனது கிளாமர் முறையாக ரீச் ஆகவில்லை.

  nandita

  தெலுங்கு சினிமாக்களில் நடிக்கத் துவங்கிய பிறகு ரெகுலராக நள்ளிரவுப்பார்ட்டிகளில் நான் கலந்துகொள்வதாக ஒரு சிலர் செய்தி பரப்புகிறார்கள். நான் இதுவரை ஒரே ஒருமுறைதான் நள்ளிரவுப் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அந்தப் பார்ட்டிகளில் நடக்கும் சமாச்சாரங்கள் பிடிக்காததால் அடுத்து செல்வதைத் தவிர்த்து விட்டேன். அதுவும் போக முழு இரவு தூக்கமும் வீணாகிவிடுவதால் மறு நாள் படப்பிடிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை என்பதும் பார்ட்டிகளுக்குப் போகாததற்கு இன்னொரு காரணம்’என்கிறார் நந்திதா.