ஒரு ஜானு வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்; மனம்நொந்த பாமக நிறுவனர் புகார் அளிக்க ஆலோசனை

  0
  3
  ராமதாஸ்

  என்னடா இது, ஒரு கூட்டணி வச்சது குத்தமாடா என ராமதாஸ் அய்யா சோகத்தில் இருக்க. நெட்டிசன்கள் பாமகவை விடுவதாக இல்லை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு விதமாக மனுசனை மண்டை காயவிடுகிறார்கள்.

  அதிமுக உடன் ஏன்டா கூட்டணி வைத்தோம் என வருத்தப்படும் அளவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நோகடித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

  திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக உடன் கூட்டணி அமைத்தது காலம் செய்த கோலம். ஆனால் அதற்கு பாமக மீது இப்படி விமர்சனம் எழும் என ராமதாஸ் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்.

  அதிமுக உடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் பெட்டி வாங்கிவிட்டார் என விமர்சிக்கப்பட்டது. டிவிட்டரில் மண்டியிட்ட மாங்க என பாமகவினரை கலாய்த்தனர்.

  மாங்கா

  அதிமுக கூட்டணியால் அதிருப்தி அடைந்த பாமகவினர் பலர் அக்கட்சியை விட்டு விலகிவிட்டனர். என்னடா இது, ஒரு கூட்டணி வச்சது குத்தமாடா என ராமதாஸ் அய்யா சோகத்தில் இருக்க. நெட்டிசன்கள் பாமகவை விடுவதாக இல்லை, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு விதமாக மனுசனை மண்டை காயவிடுகிறார்கள்.

  தமிழ் பத்திரிகையில் நெட்டிசன்களின் பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது. அதிமுக ஆட்சி 8 ஆண்டு காலமாக நல்ல ஆட்சி என ராமதாஸ் கருத்து தெரிவித்ததற்கு, ஒரு ஜானு வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன் எனும் ஈசன் பட பாடலை வைத்து அவரை கலாய்த்துள்ளனர்.

  பாமக

  பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என முடிவு செய்த ராமதாஸ், இனி யாராவது கலாய்ச்சா போலீஸ்ல பிடிச்சு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்காராம், நெட்டிசன்களே உஷார்.