‘ஒரு சின்ன கட்டி…கொம்பாக மாறிடுச்சு’ : முதியவருக்கு வந்த சோதனை!

  0
  9
  ஷ்யாம்லால் யாதவ்

  கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்  தொடர்ந்து காயம்பட்ட இடத்தில் கட்டி ஒன்று வளர்ந்துள்ளது

  மத்திய பிரதேசம்: முதியவர் தலையில் 4 இன்ச் அளவுக்கு கொம்பு முளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ராஹ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்யாம்லால் யாதவ். 74 வயது விவசாயியான இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்  தொடர்ந்து காயம்பட்ட இடத்தில் கட்டி ஒன்று வளர்ந்துள்ளது. அதை ஒருமுறை முடிவெட்டும் போது, அந்த கடைக்காரர் கத்தியால் கீறி நீக்கியுள்ளார். இருப்பினும் அந்த இடத்தில் தொடர்ந்து கட்டி போன்று ஒன்று வளர்ந்துள்ளது. நாளாக நாளாக  அதன் வளர்ச்சியின் வேகம் அதிகமாகிக் கொண்டே போயுள்ளது. 

  horn

  ஒருகட்டத்தில் அவருக்கு தெரிந்தவர்கள் ஊர்மக்கள் என அனைவரும் அந்த முதியவரை கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் கவலையடைந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால்  பல மருத்துவமனைகளில்  இதற்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூற கவலையில் துவண்டு போயுள்ளார். 

  horn

  ஒருகட்டத்தில் இதைச் சரிசெய்ய முடியாது போல என்று மனம் தளர்ந்து நின்ற அவருக்கு  போபாலில் உள்ள சாகர் மருத்துவனைக்கு போய் பாருங்கள்  என்று சிலர் அறிவுரை சொல்ல அங்கு சென்றுள்ளார் அந்த முதியவர். தற்போது டாக்டர் விஷால் தலைமையிலான மருத்துவக்குழு,  அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அந்த கொம்பை நீக்கியுள்ளனர்.