‘ஒரு கிளாஸ் பாலுக்காக மகனுக்கே பால் ஊத்திட்டியே ‘ -அப்பாவின் துப்பாக்கிக்கு பலியான பையன் 

  0
  4
  Rep Image

  உ.பி.யில் புராண்பூர் பகுதியில் உள்ள சோஹன்னா கிராமத்தில் குர்முக் சிங் (55) தனது மகன் ஜஸ்கரனுடன் (16) வசித்து வந்தார் .திங்களன்று இரவு குர்முக் சிங் தனது 12ம் வகுப்பு படிக்கும் மகன் ஜஸ்கரனிடம் தனக்கு ஒரு கிளாஸ் பால் கொண்டு வரும்படி கேட்டார்.

  உ.பி.யில் புராண்பூர் பகுதியில் உள்ள சோஹன்னா கிராமத்தில் குர்முக் சிங் (55) தனது மகன் ஜஸ்கரனுடன் (16) வசித்து வந்தார் .திங்களன்று இரவு குர்முக் சிங் தனது 12ம் வகுப்பு படிக்கும் மகன் ஜஸ்கரனிடம் தனக்கு ஒரு கிளாஸ் பால் கொண்டு வரும்படி கேட்டார். அதற்கு அவரின் மகன் அரை க்ளாஸ் பால் கொண்டு வந்துள்ளார். ஆனால் மகன் தனக்கு முழு கிளாஸ் பால் எடுத்துக்கொண்டார் .
  இதை பார்த்து கோபமடைந்த தந்தை குர்முக் சிங் மகனோடு சண்டை போட்டு துப்பாக்கியை எடுத்து மகனை சுட்டுக்கொன்றார். குறுக்கே வந்த அவரின் சகோதரர் அவதாரையும் சுட்டார். பிறகு அதே துப்பாக்கியால் தானும் சுட்டு கொண்டு இறந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் அதே இடத்தில் அப்பாவும் மகனும் இறந்த நிலையில், சகோதரர் அவதார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .