ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி இலவசம் ! புரட்டாசி ஆஃபர் !

  0
  12
  மட்டன் வியாபாரி பாபு

  புரட்டாசி முதல் தீபாவளி வரை ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கறிக்கடை வியாபாரி.

  புரட்டாசி முதல் தீபாவளி வரை ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கறிக்கடை வியாபாரி.

  புரட்டாசியை முன்னிட்டு அசைவ பிரியர்களாக இருந்தாலும் மத நம்பிக்கையை கடைபிடிப்பதால் அசை உணவில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் பல இடங்களில் ஆடு, கோழி, மீன் எதுவுமே சராசரி அளவு கூட விற்பனை ஆகாமல் இருப்பதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கறிக்கடை வியாபாரி ஒருவர் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுபவர்களை கவர்வதற்காக ஒரு கிலோ ஆட்டுக் கறி வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி இலவசம் என அறிவித்துள்ளார். இதனால் மற்ற கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  muttonstall babu

  தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர்தான் இந்த சலுகையை அறிவித்த அசத்தி உள்ளார். இவர குடும்பத்தில் 3 தலைமுறைகளாக ஆட்டுக்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். பாபுவின் கடை  திருச்சி பிரதான சாலை பிரபாத் அருகில் உள்ளது. இதுமட்டுமின்றி எப்போதுமே இவரது கடையில் ஒரு கிலோ கறி மற்றக் கடைகளை விட 50 ரூபாய் குறைவு என்பதால் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில், தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கறி விற்பனையில், இவருக்கு மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விற்பனையை அதிகரிக்க புதிதாக யோசித்த பாபு இந்த சலுகையை அறிவித்து விளம்பரப்படுத்தினார். தற்போது பாபு கடையில் மீண்டும் அலைமோத தொடங்கி உள்ளது. இந்த சலுகையை தீபாவளி வரை நீட்டிக்க உள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார் பாபு. இதுநாள் வரை வெள்ளி இலவசம் என்ற விளம்பரத்தை நகைக் கடையில் மட்டுமேதான் பார்த்த வந்துள்ளோம். கறிக்கடையிலேயே வெள்ளி இலவசமாக தருகிறார்கள் என்றால் அப்போது ஆட்டுக்கறியும் தங்கம் விலை அளவுக்கு உயர்ந்து விட்டதா என யோசிக்கத் தோன்றுகிறது.