ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி : தமிழக அரசு அறிவிப்பு!

  0
  1
  பள்ளிகல்வித்துறை

  21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

  தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

  ttb

  மேலும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனிடையே கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.  10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

  ttn

  இந்நிலையில் தமிழ்நாட்டில்  1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும்  தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக  பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பீதி காரணமாக 12 ஆம் வகுப்பு (24 ஆம் தேதி ) கடைசி தேர்வை எழுதாமல் போன மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.