ஒடிசாவில் மருத்துவர்களுக்கு முன்னதாகவே 4 மாத ஊதியம்!

  0
  4
  நவீன் பட்நாயக்

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

  கொரோனா வைரஸ்

  இந்நிலையில் ஒடிஷா மாநிலத்தில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர், மற்றும் மற்ற மருத்துவத் துறை பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன் பணமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது 3 மாத சம்பளத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்திலும் மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.