“ஐ ஹன்சிகா” யூடியூப் சேனல் தொடங்கும் ஹன்சிகா!

  0
  1
  ஹன்சிகா

  மாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஹன்சிகா.

  மாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், தற்போது மஹா என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். படு பிஸியாக நடித்து கொண்டு இருக்கும் ஹன்சிகா தற்போது மகா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

  ஹன்சிகா யூடியூப் சேனல்

  சினிமா பிரபலங்கள் பலரும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் எப்போதும் தங்களை ஆக்டிவாகவே வைத்துக்கொள்வார். அடிக்கடி ஏதாவது பதிவை பதிவிட்டு கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் மட்டும்தான் யு டியூப் வீடியோ தளத்திலும் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்துள்ளார். ”IHansika” எனப் பெயர் பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலில் தனிப்பட்ட வீடியோவை பதிவிடவிடுப்பதாக அவரே அறிவித்துள்ளார்.