ஐய்யயோ இவங்க ஜெயிச்சிட்டா… நாடு என்னாவது? முரசொலி நாளிதழ் கேள்வி

  0
  1
  மு‌‌ரசொலி ‌நாளிதழ்

  மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் நரேந்தி‌ர மோடி, அமித்‌ஷா மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது என கேள்வி‌ எழுப்பி மு‌‌ரசொலி ‌நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

  மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் நரேந்தி‌ர மோடி, அமித்‌ஷா மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது என கேள்வி‌ எழுப்பி மு‌‌ரசொலி ‌நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

  murasoli

  சமீபத்தில்‌ பி‌ரதமர் மோடி  செய்தியா‌‌ளர் சந்திப்பின்‌ போது பாஜகவின் ஒழுக்கம் மிக்க வீரர்கள் நாங்கள் என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி திமுகவின் முரசொலி நாளிதழ் நாடு என்னாவது என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், பாஜகவினர், ஆர் எஸ் எஸ் தலைவர்கள் பேசிய பேச்சுகளை தொகுத்து பார்த்தால் அவர்கள் எவ்வளவு ஒழுக்க மிக்க வீரர்களாக திகழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும் என முரசொலி குறிப்பிட்டுள்ளது. பிரக்யா சிங் தாகூரின் கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ள முரசொலிநாளிதழ், இப்படிப்பட்டவர்களை ஒழுக்கமிக்க வீரர்கள் என கட்சியில் இணைத்து கொண்டு வேட்பாளர் ஆக்குகிறார் மோடி என விமர்சித்துள்ளது. அறமற்ற பேச்சுகளை பேசுகிறவர்களை தான் ஒழுக்கமிக்க வீரர்கள் என மோடி கூறுகிறார் எனவும் இவர்கள் மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது எனவும் முரசொலி வினவியுள்ளது.