ஐயோ பாவம்… பிக் பாஸிடம் மொக்க வாங்கிய லாஸ்லியா 

  0
  4
  லாஸ்லியா

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் சீசன் தொடங்கி வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை  பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் கிடையாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

  இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா இனிமேல் இந்த வீட்டில் அனைவரும் ரூல்ஸ் படி தான் நடந்து கொள்ள வேண்டும். இந்த வீட்டில் ரூல்ஸை பின்பற்றுவது நான் மட்டும் தான். ஒருமுறை கூட இதுவரை பிக் பாஸ் என்னை மைக்கை சரியாக மாட்டுங்கள் என்று சொன்னதில்லை’ என்றார். 

  அவர் சொல்லி முடிப்பதற்குள் பிக் பாஸ் லாஸ்லியாவிடம் மைக்கை சரியாக மாட்டும்படி எச்சரித்தார். இதை கண்ட ரசிகர்கள், ‘இதுவரை மக்களிடம் தான் லாஸ்லியவை கலாய் வாங்கி வந்தார், ஆனால் தற்போது பிக் பாஸிடமும் கலாய் வாங்க ஆரம்பித்துவிட்டார்’ என்று கமெண்ட் செய்துள்ளனர்.