ஐபோன் டிஸ்ப்ளே-வை இலவசமாக மாற்றிக்கொள்ள புதிய வசதி..!

  0
  14
  ஐபோன்

  ஆப்பிள் நிறுவனம் சில வகையான ஐபோன் மாடல்களுக்கு இலவசமாக டிஸ்ப்ளே-யை மற்றிக்கொள்ளும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

  ஆப்பிள் நிறுவனம் சில வகையான ஐபோன் மாடல்களுக்கு இலவசமாக டிஸ்ப்ளே-யை மற்றிக்கொள்ளும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

  iphone

  இந்த வகையான சேவையினை பெறுவதற்கு ஐபோன் திரைகளில் சில குறைபாடுகள் காணப்பட வேண்டும்.
  அதாவது ஐபோன் திரையானது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அதன் டச் தொழில்நுட்பமானது சரிவர செயல்படாமல் இருந்தால் அதனை இலவசமாக மற்றியமைத்துக்கொள்ளலாம். அல்லது நாம் திரையினை தொடாமல் டச் சேவையானது தானகவே இயங்கும் பட்சத்தில் நாம் திரையினை இலவசமாக மற்றியமைத்து பெற்றுக்கொள்ளலாம்.

  iphone

  மேற்கண்ட பிரச்சனைகள் எதுவும் உங்களுடைய ஐபோன்களில் இருந்தால் அதனை உடனே அருகில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சேவை  நிலையத்திற்கு கொண்டு செல்லவும். அவர்கள் அங்கு அந்த ஐபோனை பரிசோதிப்பார்கள்.
  அந்த பரிசோதனையின் போது திரையில் ஏற்றபட்டுள்ள குறையினை கண்டரிந்து அதனை அவர்கள் சரி செய்து தருவார்கள்.
  சரி செய்ய முடியவில்லை எனில் அதனை இலவசமாக மாற்றியும் பெற்றுக்கொள்ளலாம்.
  ஐபோன் x மாடல்களுக்கு மட்டும் இந்த இலவச சேவையானது பொருந்தாது. அவர்கள் பணம் செலுத்தி மட்டுமே இந்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.