ஐபிஎல் தொடர் நடக்குமா…நடக்காதா? – அம்பத்தி ராயுடுவின் பதில் இது தானாம்!

  0
  7
  rayudu

  கொரோனா வைரஸ் பீதியால் இந்தாண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்விக்கு அம்பத்தி ராயுடுவின் பதில் குறித்து சி.எஸ்.கே அணி ட்வீட் செய்துள்ளது.

  சென்னை: கொரோனா வைரஸ் பீதியால் இந்தாண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்விக்கு அம்பத்தி ராயுடுவின் பதில் குறித்து சி.எஸ்.கே அணி ட்வீட் செய்துள்ளது.

  13-வது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பீதி உலகில் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஒரு சில உத்தியோகபூர்வ பிரிவுகளைத் தவிர அனைத்து விசாக்களையும் அரசு ரத்து செய்திருக்கிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டது. அதில் அம்பத்தி ராயுடுவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

  ஐபிஎல் தொடர் நடக்குமா…நடக்காதா? என்ற கேள்விக்கு “அது எப்படி எனக்கு தெரியும் ஸார்?” என்று வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கிரேசி மோகன் சொல்வது போல அம்பத்தி ராயுடு அந்தப் புகைப்படத்தில் போஸ் கொடுத்துள்ளார். இதை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பதிவில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளது. அநேகமாக சி.எஸ்.கே அணி வீரர்களின் போட்டோஷூட் சமயத்தில் அம்பத்தி ராயுடுவை இவ்வாறு போட்டோ எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.