ஐபிஎல் திருவிழா எப்போது..? வெளியான புதிய தகவல்

  0
  1
  ipl 2020

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை துவக்க சாத்தியமான 5  தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை துவக்க சாத்தியமான 5  தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

  13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

  ipl 2020

  இந்நிலையில்  8 அணிகள் பங்கேற்கும் 13 – வது ஐ.பி. எல் கிரிக்கெட் திருவிழா, கொரானா வைரஸ் தொற்று பீதி காரணமாக, வருகிற 29 – ம் தேதி துவங்காது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. ஏப்ரல் 15 ம் தேதி வரை, வெளிநாட்டு வீரர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், அதன் பின்னரே, போட்டி துவங்கும். அதேநேரம், ஐ.பி. எல் போட்டியை துவக்க, ஏப்ரல் 15, ஏப்ரல் 21, ஏப்ரல் 25 , மே 1 மற்றும் மே 5 என சாத்தியமான 5  தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.