ஐபிஎல் உடன் எனது ஆட்டம் நிறைவு!  ஓய்வை அறிவித்தார் ஹர்பஜன் சிங்!!

  0
  16
  ஹர்பஜன் சிங்

  இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் செய்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். இவரது சென்னை தமிழின் ட்வீட்களுக்கு பல புள்ளைங்கோக்கள் அடிமை…. இந்நிலையில் அண்மையில் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிகராகவும் களமிறங்கி சந்தானத்துடன்நடித்துவருகிறார். 

  ஐபிஎல்

  இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு பின்பு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப்பெறவுள்ளதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். முன்பு மும்பை இந்தியன் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். 9 வயதாகும் ஹர்பஜன் சிங் கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 2016-ல் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்படடக்கது. அதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் சர்வதேசப் போட்டிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை.