ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

  0
  4
   உண்ணாவிரத போராட்டம்

  சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துக் கொண்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு காரணமாக மூன்று பேராசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட மாணவி தனது செல்போனில் பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

  சென்னையில் ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துக் கொண்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு காரணமாக மூன்று பேராசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட மாணவி தனது செல்போனில் பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் நேற்று திடீரென்று கருப்பு உடைகளை அணிந்து ஐஐடி வளாகத்தின் வாசலில் இரு மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார்கள். 

  protest

  உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய மாணவர்களை சமாதானம் செய்ய முடியாமல் போலீசாரும், ஐஐடி நிர்வாகம் தவித்து வந்த நிலையில், இந்த மாணவர்களின் கோரிக்கை குறித்து விளக்க அறிக்கையினை தருவதற்கு ஐஐடி நிர்வாகம் சம்மதித்தன் பேரில் இன்று மாணவர்கள் தங்களது உண்ணாவிரதம் போராட்டத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டனர்.