ஐஐடி ஃபாத்திமாவைத் தொடர்ந்து திருச்சி ஜெப்ரா பர்வீன்! – தொடரும் உயிரிழப்புகள்

  0
  1
  ஜெப்ரா பர்வீன்

  சென்னை ஐஐடி-யில் மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் குறையவில்லை. அதற்குள்ளாக திருச்சி கல்லூரியில் மாணவி ஜெப்ரா பர்வீன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  திருச்சி கே.கே நகரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவிகளும் தங்கி படித்து வருகின்றனர்.

  சென்னை ஐஐடி-யில் மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் குறையவில்லை. அதற்குள்ளாக திருச்சி கல்லூரியில் மாணவி ஜெப்ரா பர்வீன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  suicide

  திருச்சி கே.கே நகரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவிகளும் தங்கி படித்து வருகின்றனர். அந்த கல்லூரியில் உணவில் துறையில் முதலாமாண்டு படித்துவந்துள்ளார் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியைச் சார்ந்த ஜெப்ரா பர்வீன். கல்லூரி விடுதியில் மிகவும் கண்டிப்பு காட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. மாணவிகள் விடுதியில் செல்போன் வைத்துக்கொள்ளக் கூட தடை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி ஜெப்ரா செல்போன் வைத்திருப்பதாக சக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், மற்ற மாணவிகள் முன்னிலையில் ஜெப்ராவை அழைத்த வார்டன், கடுமையாக பேசியுள்ளார். இதனால், மன அழுத்தத்துக்கு ஆளகி இருந்துள்ளார் ஜெப்ரா.
  மேலும், ஜார்கண்டில் இந்தியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். திருச்சியில் ஆங்கில வழியில் கல்லூரி படிப்பைத் தொடங்கியுள்ளார். இதனால், அவரால் பாடங்களையும் சரியாக படிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி ஜெப்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளாரா என்று போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.