ஏ.எல்.விஜய் பட ஹீரோவுக்கு திடீர் விபத்து: மருத்துவமனையில் அனுமதி!

    0
    3
    நடிகர் நாக சவுரியா

    படப்பிடிப்பில் நடந்த விபத்தில், நடிகர் நாக சவுரியாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    சென்னை: படப்பிடிப்பில் நடந்த விபத்தில், நடிகர் நாக சவுரியாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சவுரியா. அதைத்தொடர்ந்து தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய, தியா என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடித்த சாய் பல்லவி மீது இவர் கூறிய புகார்கள் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டன. இவர் தற்போது அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ரமண தேஜா இயக்கிவரும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மெஹ்ரின் ஹீரோயின் நடித்து வருகிறார். 

    sai

    இந்த நிலையில் படத்தின் ஆக்சன்  காட்சி ஆந்திராவின் ஊட்டி என்று கூறப்படும் அரக்கு வேலியில் நடந்து வந்தது. அதில் அவர் டூப் போடாமல் நடித்து  வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவர் இடது கால் மூட்டில் பலத்த காயமடைந்துள்ளது. 

    a

    அதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுப் படக்குழு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.