ஏழுமலையானை காண ஏழைகளுக்கும் விஐபி தரிசனம் ! கோயில் நிர்வாகம் அதிரடி !

  0
  2
  venkateswara

  பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருப்பதியில் மீண்டும் விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

  பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருப்பதியில் மீண்டும் விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாற்று ஏற்பாடு விரைவில் செயல்படுத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறி இருந்தார். இந்நிலையில் 10,000 செலுத்தினால் சிபாரிசு கடிதம் இன்றி தரிசனம் செய்யும் வசதியை மீண்டும் செயல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இந்த புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைக்க உள்ளார்.

  subba

  நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக  ஸ்ரீவாணி அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாக 10,000 ரூபாய் கொடுத்தால் விஐபி தரிசனம் கிடைக்கும். இது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பக்தர்களும் விஐபி தரிசனம் பெறலாம். அதே சமயத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கும் கோயில் கட்ட பணம் கிடைக்கப்பெறும்.