ஏற்கனவே மூணு பொண்டாட்டி, இதுல நாலாவது கல்யாணமா? வசமாக சிக்கிய அஜித்குமார்!?

  0
  1
  அஜித்குமார்

  மூன்று மனைவிகளுக்கு தெரியாமல்  நான்காவது திருமணம் செய்ய முயற்சி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

  சென்னை : மூன்று மனைவிகளுக்கு தெரியாமல்  நான்காவது திருமணம் செய்ய முயற்சி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

  சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார். கேரளாவை சேர்ந்த 47 வயதான இவர் திருமணம் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளில் வரவேற்கும் பணிக்கு பெண்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் இரு மனைவிகளும் கேரளாவில் இருந்துள்ளனர்.இதையடுத்து இவர் மூன்றாவதாக தேவிகா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். 

  marriage

  இந்நிலையில் தேவிகா சில தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று புகாரில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார்  அஜித்குமாரிடம்  நடத்திய விசாரணையில், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்த அஜித்குமாருக்கு புதிதாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது மூன்று மனைவிகளுக்கும் தெரியாமல் அந்த பெண்ணை நான்காவது திருமணம் செய்ய முடிவெடுத்ததும் தெரியவந்தது. 

  crime

  இதைத் தொடர்ந்து அஜித்குமார் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.