ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி! டிச. 1 முதல் கூடுதல் கட்டணம்!! 

  0
  4
  Vodafone vs Airtel

  வரும் 1 ஆம் தேதி முதல் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் தங்களது கடணங்களை  உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

  வரும் 1 ஆம் தேதி முதல் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் தங்களது கடணங்களை  உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

  ஜியோவின் வருகைக்கு பிறகு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்தன. ஜியோவின் சலுகைகளை சமாளிப்பதற்காக வோடபோனும், ஐடியாவும் இணைந்தது. இருப்பினும் ஜியோவுடன் போட்டிப்போட முடியாததால் ரூ. 74 ஆயிரம் கோடி கடனை சந்தித்த வோடபோனும் ஐடியாவும் இந்தியாவை விட்டே வெளியேற முடிவு செய்தன. மிகப்பெரிய அளவில் இருந்து வந்த ஏர்செல், டொகோமோ நிறுவனங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் மூடப்பட்டன. செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் 2 வகையான கட்டணங்களை மத்திய டெலிபோன் துறைக்கு செலுத்த வேண்டும். அதாவது உரிமம் கட்டணம், அலைக்கற்றை கட்டணம் என செலுத்த வேண்டும். செல்போன் நிறுவனங்களின் செயல்பாடு அடிப்படையில் இந்த இரு கட்டணங்களும் நிர்ணயிக்கப்படும். ஐடியாவும், வோடபோனும் இந்த தொகையை மத்திய அரசுக்கு வழங்கவில்லை. 

  ஏர்டெல் வோடபோன்

  இந்நிலையில் வோடபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருப்பது வாடிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். நிதி நெருக்கடியிலிருந்து மீள நிறுவன அதிகாரிகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் இந்தியாவில்தான் மிகவும் குறைவு. ஆதலால் அதனை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த புதிய விதிமுறை வரும் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

  வோடபோன் இந்தியா தன்னை அதிவிரைவில் வளர்த்துக்கொண்டு வருகிற 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 0 லட்சம் இந்தியர்களுக்கு 4ஜி சேவையை வழங்குவோம்” என தெரிவித்துள்ளது. இதேபோல், ஏர்டெல் நிறுவனமும் தனது கால் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அண்மையில் ஜியோ நிறுவனம் ஜியோ டூ ஜியோவுக்கு மட்டுமே இலவச கால்கள் என்றும் மற்ற கால்களுக்கு விநாடிக்கு 6 பைசா என்றும் அறிவித்தது குறிப்பிடதக்கது.