ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த இளம் பெண்! போலீசில் இளைஞர்… தலைமறைவான குடும்பம்

  19
  marriage

  பொள்ளாச்சியில் இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பொள்ளாச்சியில் இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ttn

  பொள்ளாச்சி ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மணிகண்டன். திருமணத்துக்கு பெண் தேடி வந்துள்ளார். அப்போது இவரது நண்பர் வால்பாறையில் சுரேஷ் ஆனந்தன் என்பவருக்கு சோபியா என்று ஒரு பெண் இருக்கிறார் என்று கூறியுள்ளார். மணிகண்டனும் அங்கு சென்று பெண் பார்த்துள்ளார். பிடித்துவிட்டதால் சம்பந்தம் பேசி கடந்த செப்டம்பர் மாதம் மணிகண்டனுக்கும் சோபியாவுக்கும் திருமணம் நடந்தது. 
  திருமணம் ஆன நான்கே நாளில் சோபியா வாந்தி எடுத்துள்ளார். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் அவருக்கு இருந்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரித்ததில், வால்பாறையைச் சேர்ந்த தயாளன் என்பவருடன் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

  ttn

  ஏற்கனவே திருமணம் ஆன பெண் தன்னுடைய திருமணத்தை மறைத்து, விவாகரத்து செய்யாமல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக சோபியா மீது மணிகண்டன் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டனின் வசதியைப் பார்த்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சோபியா, அவரது பெற்றோர், சகோதரர் என ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.